இஸ்ரேலுக்கு முழு உதவி அளிக்கப்படும்: பெஞ்சமினுடனான ஊடக சந்திப்பில் பைடன் உறுதி
இஸ்ரேலுக்கான உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் என அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - இஸ்ரேல் பிரதமர் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.
ஐ.எஸ் அமைப்பின் பாதையை அப்படியே ஹமாஸ் அமைப்பினர் பின்பற்றி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் தற்போதைய நாஜிப்படைகளாக மாறி இருக்கின்றனர்.
அவர்கள் இதுவரை 1400 இஸ்ரேலியர்களை கொன்றுள்ளனர். இது கவலையளிக்கும் விடயமாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமெரிக்காவின் ஒத்துழைப்பிற்கும் உதவிகளுக்கும் நன்றி என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி,
இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும். 75 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலின் நிறுவனர்கள், சுதந்திரம், நீதி மற்றும் அமைதி அடிப்படையில் ஒரே நாடாக இஸ்ரேலை அறிவித்தனர்.
இந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் இஸ்ரேலுடன், இன்றும், நாளையும் மற்றும் எப்போதும் அமெரிக்கா துணையாக நிற்கும்.
அதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம். ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக இல்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் காசா பகுதி மக்களுக்கு உதவி தேவையாக உள்ளது.
மேலும், காசா வைத்தியசாலை மீது நடந்த தாக்குதல் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
No comments