நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த பயணிகள் கப்பல்
இந்தியா - நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை நோக்கி வருகைதந்துள்ளது.
இந்த கப்பல் மீண்டும் இன்று பி.ப 2 மணியளவில் 31 பயணிகளுடன் இந்தியா - நாகப்பட்டினம் நோக்கி செல்லவுள்ளது.
இந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு ஆளுநர் சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments