Header Ads

காசாவில் இருந்து வெளியேற வேண்டாம்: ஹமாஸ் அமைப்பினர் வேண்டுகோள்!


காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டாம் என ஹமாஸ் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காசாவின் வடக்குபகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். இஸ்ரேல் இராணுவத்துக்கு அஞ்ச வேண்டாம். துணிச்சலுடன் செயல்படுங்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் இராணுவம் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை காசா பகுதி மீது வீசியுள்ளது. இதில் 1,530 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிமீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதற்கு பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் நேற்று கூறும்போது, காசா பகுதி மீதான தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் உடனடியாகநிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்த போர் மத்திய கிழக்கின் இதர பகுதிகளுக்கும் பரவும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நயீம் குவாசம் நேற்று கூறும்போது, பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் கொடூர தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த போரில் ஹிஸ்புல்லா தலையிடக்கூடாது என்று உலகின் வல்லரசு நாடுகள், ஐ.நா.சபை உள்ளிட்டவை வலியுறுத்தி உள்ளன. யாருடைய அறிவுறுத்தலும் எங்களுக்கு தேவையில்லை. எங்களது கடமையை செய்வோம். நாங்கள் போருக்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார். 



No comments

Powered by Blogger.