Header Ads

தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் - காசாவின் எல்லையில் இராணுவம் குவிப்பு!


இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாரிகிக்கொண்டிருக்கிறது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைக்கோடு பகுதியில் சிறப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காசா மீது அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து சுமார் 14 நாட்களாக இரு நாடுகளும் அடுத்தடுத்து பதிலடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை இஸ்ரேலில் தரப்பில் 1,400 பேரும் காசாவில் 3 ஆயிரத்து 478 பேரும் பலியாகியுள்ளனர் என அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக ஏவுகணைகள், குண்டுகள் மூலம் பெரும்பாலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்களின் அடுத்தகட்ட தாக்குதலாக தரைவழித்தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், காசா எல்லையில் சிறப்புப் படையினர் தற்போது ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தரைவழித்தாகுதலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. 




No comments

Powered by Blogger.