Header Ads

மருந்தாளர்களுக்கு பற்றாக்குறை - மருந்து விநியோகத்தில் சிக்கல்


 மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ குறிப்பிட்டுள்ளார்.

மருந்தாளர் பற்றாக்குறையினால் வெவ்வேறு தரங்களில் சேவையாற்றும் ஊழியர்கள், மருந்து விநியோகத்தை முன்னெடுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலைமை தொடர்ந்தால் மருந்து விநியோக முறைமையில் பாரிய அபாயம் ஏற்படும் எனவும் அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் பல்கலைக்கழகங்களில் மருந்தாளருக்கான கற்றல் நடவடிக்கைகளை நிறைவு செய்யும் மாணவர்கள், வெவ்வேறு தொழில்களை தேடிச்செல்கின்றமை கவலைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சும் மருந்தாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதை நிறுத்தியுள்ளமை தற்போதைய நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என  அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.  


No comments

Powered by Blogger.