யாழில் வாள்வெட்டு - இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்குள்ளாகி காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிரிதொரு வாகனத்தில் வருகை தந்த சிலர் வழி மறித்துள்ளனர்.
இந்த நிலையில் முச்கக்கர வண்டியில் பயணித்த இளைஞரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments