Header Ads

வீதி விபத்தில் சிக்கினார் பிரபல பாடகி!


தென்னிந்தியாவின் பிரபல பாடகி பாடகி சின்மயி வீதி விபத்தில் சிக்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருப்பவர் சின்மயி.

பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ள இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீடு விபத்தில் சிக்கினேன் என சின்மயி தனது சமூக லைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் வந்து மோதியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து முச்சக்கர வண்டி சாரதி தப்பித்தும் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் தனக்கோ அல்லது தன் உடன் இருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும், தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம் என்றும் சின்மயி தெரிவித்துள்ளார்.

மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார்.  



No comments

Powered by Blogger.