வர்த்தக வாகனங்கள் இறக்குமதிக்கான அனுமதி மீண்டும் இரத்து
வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த உப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னரே மீண்டும் வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய வாகனங்களின் இறக்குமதிக்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments