அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் - மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015 இல் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றேன், எனினும், எனக்கு தேவையானவற்றை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நிறைவேற்று அதிகார அதிபராக இருந்தாலும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாவிட்டால் உரிய வகையில் செயற்பட முடியாது.
எனது கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுக்கவே நாடாளுமன்ற தேர்தலில் கூட போட்டியிட்டேன், முதுகெலும்பு இருக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments