Header Ads

சர்வதேச ஊடகத்துக்கு தடை விதித்தது இஸ்ரேல்!


சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தை மூட அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், மோதல்களை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஜெருசலேமில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அந்த நாட்டின் அரசாங்க செய்தி தொடர்பாளர் அயூப் காரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அல் ஜசீரா அலுவலகங்களை மூடுவதற்கும் அவர்களின் வேலையைத் தடைசெய்வதற்கும் அரபு நாடுகளின் நடவடிக்கையின் அடிப்படையில் எங்கள் முடிவை மேற்கொண்டுள்ளோம்.

வன்முறையை மேற்கொள்ளும் முகமாக இந்த ஊடகம் செயற்படுகிறது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன என அயூப் காரா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை, அந்த நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

No comments

Powered by Blogger.