Header Ads

ஆதிவாசி குழுவினர் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை!


மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (21) வரவுள்ளனர்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைகிறது எனவும் இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளோம் என ஆதிவாசிகளின் தலைவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.