ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார்.
அவ்வகையில், ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் சாத்தியமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஏனைய அரசியல் கட்சிகள் தம்மை எதிரியாக பார்த்தாலும் தாம் ஜனாதிபதி என்று கூறியுள்ளார்.
கட்சி பாகுபாடுகளை தாம் பொருட்படுத்தவில்லை எனவும் சிறிலங்காவின் அதிபராக எதிர்வரும் நாட்களில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாதெனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments