இஸ்ரேலில் இலங்கைப் பெண் உயிரிழந்திருக்கலாம் - இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை
இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் கொல்லப்பட்டுள்ளார் தகவல் வெளியாகியுள்ள போதிலும், இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு இலங்கை பிரஜை பணயக்கைதியாக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த விடயங்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளது என நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
களனி - ஈரியவெட்டிய பகுதியை சேர்ந்த அனுலா ரத்நாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் பணிபுரிந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
No comments