இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்தார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நேற்று மாலை இலங்கைக்கு வருகை தந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவரும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் இந்திய வெளிவிவகார அமைச்சரை வரவேற்றுள்ளனர்.
No comments