கொள்ளுப்பிட்டி விபத்தில் 5 பேர் பலி!
கொள்ளுப்பிட்டி, லிபட்டி சந்திக்கு அருகில் பாரிய மரம் ஒன்று பஸ்ஸின் மீது விழுந்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீதே மரம் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், காயமடைந்த நான்கு பயணிகளும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments