கிளிநொச்சியில் இளைஞரின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
சடலத்தில் காயங்கள் காணப்படும் நிலையில், ஆயுதம் ஒன்றினால் தாக்கி குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
No comments