கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் ஒன்றியம் கண்டனம்
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழு மேற்கொண்ட திட்டமிட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும்.
இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments