திருமண நிகழ்வில் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் பலி
கனடா - ஒட்டோவா பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்விற்கு திடீரென வருகை தந்த நபர் ஒருவர் அங்கு ஒன்றுகூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
அத்துடன் துப்பாக்கிப்பிரயோகத்தில் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தப்பிச்சென்றுள்ள சந்தேக நபரை தேடி அந்நாட்டு காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments