உலகிலேயே மிக நீளமான சிகை கொண்ட பெண்!
உலகிலேயே மிக நீளமான சிகை உள்ளவராக அமெரிக்காவின் டேமி மானிஸ் தெரிவாகியுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான டேமி மானிஸ்.
1980 களில் பிரசித்தி பெற்றிருந்த 'முல்லெட்' என அழைக்கப்படும் சிகை வடிவத்தின் மீது மானிஸ் ஆர்வம் கொண்டார்.
தானும் இதே போன்று சிகையை நீளமாக வளர்த்து கொள்ள வேண்டும் என விரும்பினார். இதன் காரணமாக 1990 பெப்ரவரி மாதம், அவர் கடைசியாக ஒரு முறை சிகை திருத்தும் நிலையத்திற்கு சென்று இதற்கேற்றவாறு சில மாற்றங்களை செய்து கொண்டார்.
அதற்கு பிறகு அவர் தனது சிகையின் அளவை வெட்டி கொள்ளவோ, திருத்தி கொள்ளவோ இல்லை. தற்போது இவரது சிகையின் நீளம் 5 அடி 8 அங்குலம்.
உலகில் நிகழ்த்தப்படும் அனைத்துவிதமான சாதனைகளையும் பதிவு செய்யும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டிற்கு, மானிஸ் தனது சிகையின் நீளம் தெரியும் விதமாக ஒரு காணொளியை அனுப்பினார்.
இதனையடுத்து, கின்னஸ் அமைப்பு, உலகிலேயே முல்லெட் வகை சிகைகளில் மிக நீளமான சிகை உள்ளவராக மானிஸை அதிகாரப்பூரமாக அறிவித்தது.
2024 கின்னஸ் புத்தகத்தில் இது வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments