பாரம் தூக்கி விழுந்ததில் ஆறு பேர் உயிரிழப்பு
சீனாவில் பாரம் தூக்கி சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அப்போது டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைநடதவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments