Header Ads

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு


சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளது என  பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900 ஆகக் காணப்பட்டது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  



No comments

Powered by Blogger.