Header Ads

சட்டவிரோத மதுபான போத்தல்கள் ஏல விற்பனை


சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 18 ஆயிரத்திற்கும் அதிக மதுபான போத்தல்களை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.

வருடத்தின் ஆரம்பம் முதல் சேகரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபான போத்தல்கள், அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன என சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இவற்றை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினால் ஏல நடவடிக்கை உட்படுத்தப்படவுள்ளன.  இது தொடர்பான கலந்துரையாடல்களை மதுவரி திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஏலத்திற்கு விடப்படவுள்ள சட்டவிரோத மதுபான போத்தல்கள், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது என சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட மேலும் தெரிவித்துள்ளார். 



No comments

Powered by Blogger.