Header Ads

957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகல்!


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோபா குழுவில் இந்த விடயம் தெரிவைக்கப்பட்டுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வருட கடமை விடுப்பு பெற்று வெளிநாடு செல்வதற்காகவே பெரும்பாலான வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பதவி விலகிய வைத்தியர்கள் பலர் இருக்கின்றனர் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். 



No comments

Powered by Blogger.