Header Ads

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல் வீசி தாக்குதல் !


இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க  சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்களால் தாக்கியதில் அதில் இருந்த பிராங்கிளின் என்ற கடற்றொழிலாளர் படுகாயம் அடைந்துள்ளார்.

இதையடுத்து, ஏனைய மீனவர்கள் அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மத்திய, மாநில உளவு பொலிஸார்  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  



No comments

Powered by Blogger.