Header Ads

இலங்கையில் மீண்டும் சிறிய அளவில் நில அதிர்வு


மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு நேற்றிரவு பதிவாகியுள்ளது.

2.4 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது என புவிச்சரிதவியல், சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

படல்கும்பர , மெனராகலை, நக்கல, மதுருகெட்டி  உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு அவதானிக்கப்பட்டுள்ளது என புவிச்சரிதவியல், சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தில் கடந்த சில மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி வெல்லவாய, புத்தல பிரதேசத்தில் 3 , 3.5 மெக்னிட்யூட் பதிவாகியிருந்தது.

பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வெல்லவாயவில் 2.3 மெக்னிட்யூட் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

அடுத்த நாள் காலை 8.45  தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் உணவட்டுனவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

புத்தல, பெல்வத்த, ஆனபெல்லம,வெல்லவாயவை அண்மித்த பகுதியில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி 3 , 3.5 மெக்னிட்யூட்   நில அதிர்வு பதிவானது.

மார்ச் மாதம் 18 ஆம்  திகதி கிரிந்த பலுடுபான, ஹாஜியார் பகுதியில் 2.6 மெக்னிட்யூட் அதிர்வு பதிவாகியிருந்தது.

திருகோணமலை - கோமரன்கடவெலவில்  1.3 மெக்னிட்யூட் நில  அதிர்வு கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி பதிவானது.

கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதி தென்னிந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் அதன் தாக்கம் உணரப்பட்டது.



No comments

Powered by Blogger.