எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலி!
அசர்பைஜானில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசர்பைஜானில் உள்ள ஸ்டெபனகெர்ட் பகுதியில் எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஏழு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், 290 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருகின்றனர் என அந்த நாட்டு பிராந்தியத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மூன்று தசாப்த கால பிரிவினைவாத ஆட்சிக்குப் பின்னர் அசர்பைஜானின் பிராந்தியத்தை முழுமையாக மீட்பதற்காக கடந்த வாரம் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் பின்னர், நாகோர்னோ-கராபாக்கின் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இப்பகுதியை விட்டு வெளியேறும் போது இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.




No comments