Header Ads

பாம்புகளுடன் உறங்கும் சிறுமி!


விஷப்பாம்புகளை கட்டியணைத்தபடி சிறுமி உறங்கும் விடயம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

பாம்பை கையால் பிடித்து விட்டாலே பெரிய சாகசம் செய்ததாக நினைக்கும் காலத்தில், அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து உறங்கும் காட்சி தற்போது இணையம் எங்கும் பரவி வருகிறது.

இந்த காட்சிகளில் சிறுமி பாம்புகளை கட்டிப்பிடித்தபடி உறங்குவதையும்,பாம்புகள் அவளது உடலை சுற்றியபடி நெளிவதையும் காண முடிகிறது.

இது பார்ப்போரை பதற வைப்பதாக அமைகின்றது. ஆனால் அந்த சிறுமி எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் பாம்பை அரவணைத்தபடி தூங்குவது நிஜமாகவே நெஞ்சை பதரவைக்கும் செயலாக உள்ளது.

குறித்த காணொளியினை இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி இணையமெங்கும் பரவி இந்த காணொளியினை 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

62 ஆயிரம் பேர் இதை பகிர்ந்துள்ளதுடன், பலர் இது தொடர்பாக பரவலான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.



No comments

Powered by Blogger.