Header Ads

46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பதில் தாக்குதலில் 10 இராணுவ வீரர்கள் பலி!


ஆபிரிக்க நாடான மாலியில் 46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன்,  பதில் தாக்குதலில் 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆபிரிக்க நாடான மாலியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவ ஆட்சியில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாதிகள் தலைதூக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நாட்டின் சாகல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க இராணுவத்தினர் கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் இருதரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் கவோ பகுதியின் போரெம் நகரில் இராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் ரோந்துப்பணியினை மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் பொருத்திய வாகனங்களில் இராணுவ வீரர்களின் வாகன அணிவகுப்பிற்குள் திடீரென புகுந்து தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 46 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின்போது தாக்குதலில் 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 



No comments

Powered by Blogger.