Header Ads

இரண்டாக உடைந்து விழுந்த விமானம்!



மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சிறிய ரக விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி பாதியாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கனமழை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. அதில் பயணம் செய்த எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகளும் சிறிது நேரம் மூடப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்துக்கு வந்த 9 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பதிவாகியமை இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியுள்ளதுடன், மீட்பு படையினர் விரைந்து  தீயை அணைத்துள்ளனர்.  



No comments

Powered by Blogger.