Header Ads

நாளையுடன் நிறைவுக்கு வரும் soldes - விற்பனை வீழ்ச்சி

 


கோடை கால மலிவு விற்பனையான soldes, நாளை ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. முந்தைய ஆண்டுகளை விட குறைந்த அளவான விற்பனையே இவ்வருடம் இடம்பெற்றுள்ளது.

ஜூன் 28 ஆம் திகதி ஆரம்பித்த இந்த மலிவு விற்பனை ஜூலை 25 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் இந்த மலிவு விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து மேலும் ஒரு வாரத்துக்கு இந்த விற்பனை நீடிக்கப்பட்டு நாளை ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது.



இந்நிலையில், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என விற்பனையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 'பணவீக்கம், பொதுமக்களின் வாங்கும் திறன், வன்முறைகள்' போன்ற காரணிகளினால் விற்பனை வீழ்ச்சி பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிவு விற்பனை ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களிலும் விற்பனை நன்றாக இருந்ததாகவும், பின்னர் ஓரளவு வீழ்ச்சியைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.