பரிஸ் : நகைக்கடை கொள்ளை - 10 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் மாயம்
பரிசில் உள்ள நகைக்கடை ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் கொள்ளையிடப்பட்டுள்ளது. 10 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய நகைகள் மாயமாகியுள்ளன.
பரிசின் இதயப்பகுதியான 2 ஆம் வட்டாரத்தின் rue de la Paix வீதியில் உள்ள Piaget நகைக்கடையே கொள்ளையிடப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி அளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் சிலர் ஆயுதத்துடன் உள் நுழைந்து, கடையினை கொள்ளையிட்டுள்ளனர்.
பெறுமதிமிக்க ஆடம்பர நகைகளே கொள்ளையிடப்பட்டுள்ளன. முதல்கட்ட தகவல்களின் படி கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 10 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
No comments