🔴 Orly : பொதி விநியோகத்தில் தடங்கல் - விமான சேவைகளில் தாமதம்
Orly சர்வதேச விமான நிலையத்தில் பொதி விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தடங்கல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை நண்பகல் முதல் நான்காவது முனையத்தில் (terminal 4 ) இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் பொதிகளை தரவேற்றும் baggage system பழுதடைந்துள்ளதை அடுத்து, பயணிகளின் உடமைகளை விமானங்களில் ஏற்றுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இதனால் விமான சேவைகளை குறித்த நேரத்தில் இயக்க முடியாமல் உள்ளதாக அறிய முடிகிறது.
கோடைகால விடுமுறையில் அதிகளவான பயணிகள் விமான நிலையமூடாக பயணிக்கும் நிலையில், இந்த தடங்கள் பயணிகளுக்கு பெரும் சிரமத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 40 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 10,000 பயணிகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
No comments