Header Ads

🔴 Niger : வெளியேற்றம் நிறைவுக்கு வந்தது - 1,079 பேர் பரிசை வந்தடைந்தனர்

 


Niger இல் இருந்து பிரெஞ்சு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 5 விமானங்களில் 1,079 பேர் பரிசுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ஆரம்பித்த இந்த வெளியேற்ற பணி, இன்று வியாழக்கிழமை காலையுடன் நிறைவுக்கு வந்துள்ளது. 577 பிரெஞ்சு மக்களுடன் மொத்தமாக 1,079 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர். வெளிநாட்டவர்களில் அமெரிக்கர்கள் உட்பட கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Niger இல் இருந்து வெளியேற விரும்பிய அனைத்து பிரெஞ்சு மக்களும் பரிசுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹேல் பிராந்தியத்துக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Niger பிரான்சின் முன்னாள் காலனி நாடாகும். அங்கு ஜனாதிபதியாக இருந்த முகமட் பாஸூம், கடந்த ஜூலை 26 ஆம் திகதி இராணுவ சதி மூலம் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதன் புதிய ஆட்சியாளராக தளபதி Abdourahamane Tiani தன்னை அறிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.