Bouches-du-Rhône மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை - இரண்டு மடங்கு தீயணைப்புபடையினர் குவிப்பு
பிரான்சின் தெற்கு மாவட்டமான Bouches-du-Rhône இற்கு காட்டுத்தீ பரவல் காரணமாக அதிகபட்ச ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக இங்கு காட்டுத்தீ பரவும் அபாயம் எழுந்துள்ளது. இங்கு வசிக்கும் அல்லது நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தீயணைப்பு படையினரின் எண்ணிக்கை 500 இல் இருந்து 1,000 பேராக அதிகரிக்கப்பட்டு, அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments