🔴 எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
ஜூலை மாத இறுதியில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியற்றின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த உச்சக்கட்ட விலையினை மீண்டும் எட்டியுள்ளது.
டீசல் ஒரு லிட்டரின் விலை 4 சதங்களினல் அதிகரித்துள்ளது. தற்போது €1.7399 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.
95-E10 பெற்றோல் கடந்த வாரத்தில் 4 சதங்களினால் அதிகரித்து தற்போது €1.8671 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. ஜூலை மாத ஆரம்பத்தில் இருந்து 6 சதங்கள் விலை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் crude எண்ணையின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து இந்த எரிபொருள் விலை அதிகரிப்பைச் சந்திடுள்ளது. கடந்த வாரம் வரை $73.4 யூரோக்களுக்கு விற்பனையான ஒரு பீப்பாய் crude எண்ணை தற்போது $82.9 யூரோக்களுக்கு விற்பனையாகிறது.
No comments