Header Ads

விசேட அதிரடிப்படையினரால் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு


கிளிநொச்சி - பரந்தனில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் காணி உரிமையாளர்களால் கிணறு துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இன்று  (21) நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடி படையினரால் கிணற்றில் இருந்து வெடி பொருட்களை மீட்கும் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பல்வேறு வகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.





No comments

Powered by Blogger.