தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்: சிங்களவர்களுக்கு உதய கம்மன்பில அழைப்பு
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்பமாக கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments