ரணில் அரசை ஓட ஓட விரட்டியடிப்போம்: ஜே.வி.பி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், அவர் தலைமையிலான மொட்டு அரசையும் ஓட ஓட விரட்டியடிப்போம். அந்த நாள் நெருங்கி வருகின்றது. மக்கள் படை எமது பக்கமே நிற்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"தானும் அரசும் கவிழப் போகின்றதை ரணில் விக்ரமசிங்க உணர்ந்துவிட்டார். அதனால் தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு இடமில்லை என்று அவர் உளறுகின்றார்.
மக்கள் ஆணை இல்லாத ஒருவர் எப்படி ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும்? மக்கள் ஆணையை இழந்த அரசு எப்படி ஆட்சியை தொடர முடியும்?
இலங்கையில் விசித்திரமான ஜனாதிபதி தலைமையிலான அரசு பதவியில் இருக்கின்றது.
மக்களை வதைக்கும் இந்த அரசை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய ஆரம்பித்துள்ளார்கள். ரணில் - மொட்டு அரசை ஓட ஓட விரட்டியடிப்போம்." என தெரிவித்துள்ளார்.
No comments