🔴 ஏழு பேருடன் பயணித்த உல்லாசப்படகு - கடலில் மூழ்கியது
பிரான்சின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் ஏழு பேருடன் பயணித்த உல்லாசப்படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. அதில் ஏழு பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
19 மீற்றர் நீளமுடைய படகு ஒன்று Beaulieu-sur-Mer (Alpes-Maritimes) பகுதிக்குட்பட்ட கடலில் மூழ்கியுள்ளது. கரையில் இருந்து 35 கி.மீ தூரம் படகு பயணித்திருந்த நிலையில், திடீரென அது கட்டுப்பாட்டை இழந்து மூழ்குவதாக கிடைத்த தகவலை அடுத்து, அதில் பயணித்தவர்களை கடற்படை ஜொந்தாமினர் மீட்டனர்.
படகில் பயணித்த ஏழு பேரும், அவர்களது சில உடமைகளும் மீட்கப்பட்டன.
படகு கடலில் மூழ்கியது. 2500 மீற்றர் ஆழமுடைய கடற்பிராந்தியம் அது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு மூழ்கியமைக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேவேளை, குறித்த படகு மூழ்கியதால் கடல் மாசடைவு ஏற்படும் எனவும், . அதில் 7,000 லிட்டர் டீசல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments