யாழில் பெறுமதி மிக்க பொருட்கள் திருட்டு
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் பெறுமதி மிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 10 பவுன் தங்க நகை, 3 கையடக்கத் தொலைபேசிகள், 2 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியன திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் இடம்பெற்ற போது தம்பதியரும் அவர்களது இரு பிள்ளைகளும் வீட்டில் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments