சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் திடீரென மாயம்!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதிக்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளார்.
கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டிலிருந்து தன்னுடைய சொந்த இடமான கைதடி பகுதிக்கு வருகை தந்த இளைஞனே நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments