கனடா காட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை!
வட கனடா பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
யெலோனைஃப் நகரத்தில் உள்ள 20 ஆயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக 22 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் நீண்ட வரிசையில் மக்கள் இருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரிட்டிஷ் கொலம்பிய மாநிலத்தில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
No comments