3000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!
நாட்டில் 3000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில், 600 இற்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது என அமைச்சு கூறியுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 வைத்தியர்கள் வைத்திய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனூடாக விசேட வைத்திய நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறை பிரச்சினை ஓரளவு நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியமையினால் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருட காலத்திற்குள் 274 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது.
குறித்த காலப் பகுதிக்குள் விசேட தரங்களை சேர்ந்த 842 வைத்திய அதிகாரிகளும் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
No comments