பதவி விலகுமாறு கோரவில்லை: அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு
சுகாதார அமைச்சரை பதவி விலகுமாறு கோரப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர், தன்னை பதவி விலகுமாறு எவ்வித கோரிக்கையும் எத்தரப்பினராலும் விடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
No comments