Header Ads

இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக் கொலை!


குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை - இலங்காபுரம் பிரதேசத்தில் இன்று  இடம்பெற்றுள்ளது.

இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.சமரக்கோன் (வயது 42) என்பவரே வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கொண்ட குழுவே குறித்த குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.