சகல மலையக எம்.பிக்களுக்கும் ஜனாதிபதி அவசர அழைப்பு !
சகல மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில், ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் மலையக மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 3,000 மில்லியன் ரூபாவை, எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காக இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments