தரம் மூன்றிற்கு பின்னர் மாணவிகள் கல்வியை தொடர முடியாது: தலிபான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தரம் மூன்றிற்கு பின்னர் மாணவிகள் கல்வியை தொடர முடியாது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், உடற்பயிற்சி நிலையங்கள், சிகையலங்கார நிலையங்கள், பூங்காக்கள மற்றும் சந்தைகள் போன்ற பொது இடங்களுக்கு பெண்கள் வெளியில் செல்லும் போது தமது முகங்களை மறைப்பது கட்டாயமாகும் எனவும் தலிபான் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானின் சில மாகாணங்களில் 10 வயதிற்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கல்வியை தொடர தடை விதிக்குமாறு தலிபான் அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments