சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 10 பேர் காயம்!
சீனாவின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உட்பட மொத்தம் 74 கட்டடங்கள் இடிந்து சேதமான நிலையில், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மீட்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments