இனவெறி தாக்குதல்: மூவர் பலி!
அமெரிக்காவில் இடம்பெற்ற இனவெறி துப்பாக்கிச்சூட்டில் கறுப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் நேற்று துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது..
குறித்த பகுதியில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கறுப்பினத்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவரும், இரண்டு ஆண்களும் என கறுப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது பொலிஸார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments