சற்றுமுன் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
வெல்லம்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்துவாரத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தலைமறைவான சந்கேநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments